168
இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும், மலேசிய பிரதமர் நாஜீப் ரசாக்கிற்கும் இடையில் சீனாவில் சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது.,இந்த சந்திப்பின் போது இலங்கைக்கு தொடர்ச்சியாக ஆதரவளிக்கப்படும் என மலேசிய பிரதமர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக பொதுத்துறை ஊழியர்களின் நிர்வாகத் திறனை மேம்படுத்தும் நோக்கில் சில திட்டங்களை அமுல்படுத்த உள்ளதுடன் இலங்கை அரச பணியாளர்களுக்கு தொழில்நுட்ப பயிற்சிகளை வழங்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இரு நாடுகளினதும் பிரதமர்கள் தற்போது சீனாவில் நடைபெறும் கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love