166
காலி முகத் திடலில் அண்மையில் நடைபெற்ற கூட்டத்தைக் கொண்டு அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மே 1ம் திகதி காலி முகத் திடலில் கூட்டு எதிர்க்கட்சியினர் மே தினக் கூட்டத்தை நடத்தியிருந்தனர்.
இந்த மே தினக் கூட்டத்தில் அதிகளவில் மக்கள் பங்கேற்றதாகவும் இதன் ஊடாக அரசாங்கத்திற்கான எதிர்ப்பு வலுப்பெற்றுள்ளதாகவும் சிலர் செய்யும் பிரச்சாரத்தில் உண்மையில்லை என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். மே தினக் கூட்டத்தில் பங்கேற்ற மக்களைக் கொண்டு ஆட்சியை மாற்ற முடியும் என எவரேனும் திட்டமிட்டால் அது வெறும் கனவாகவே அமையும் என அவர் சுட்டிக்காட்டியள்ளார்
Spread the love