194
மெக்ஸிக்கோ சிறைச்சாலை ஒன்றில் இரகசிய சுரங்கப் பாதை ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்த சுரங்கப் பாதையில் போதைப் பொருள், கூரிய ஆயுதங்கள் மற்றும் மதுபான வகைகள் போன்றன காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மெக்ஸிக்கோவின் றெய்நோஸா (reynosa )நகரில் இந்த சிறைச்சாலை அமைந்துள்ளது.
மெக்ஸிக்கோவின் சில சிறைச்சாலைகளிலிருந்து சில கைதிகள் சுரங்கப்பாதைகளை அமைத்து அதனூடாக தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எனினும் புதிதாக கண்டு பிடிக்கப்பட்டுள்ள சுரங்கப்பாதையினூடாக எவரும் இதுவரையில் தப்பிச் செல்லவில்லை என சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
Spread the love