இந்தியாவின் முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோரின் வீடுகள் மற்றும் அவர்கள் தொடர்புடைய இடங்களில் இந்திய மத்திய புலனாய்வுத் துறை சோதனை மேற்கொண்டுவருவதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
டெல்லி, சென்னை உள்பட சிதம்பரத்திற்குச் சொந்தமான 8 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகின்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த மாதம் ஃபெமா சட்டத்தின் கீழ் கார்த்தி சிதம்பரத்திற்கும் அவருடன் தொடர்புடையதாகக் கூறப்படும் ஒரு நிறுவனத்திற்கும் அழைப்பாணை அனுப்பப்பட்டதுடன் ஏர்செல் – மக்சிஸ் வழக்கிலும் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வந்தது.
இந்த நிலையில்தான் இந்த சோதனைகள் இன்று செவ்வாய்க்கிழமை காலை முதல் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சோதனைகள் எந்த வழக்கிற்காக, எத்தனை இடங்களில் நடக்கின்றன என்பதை சி.பி.ஐ. தெரிவிக்கவில்லை.