Home இந்தியாஇந்திய முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம், அவரது மகன் கார்த்தி, ஆகியோரின் வீடுகளில் புலனாய்வுத் துறை சோதனை:-

இந்திய முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம், அவரது மகன் கார்த்தி, ஆகியோரின் வீடுகளில் புலனாய்வுத் துறை சோதனை:-

by admin

இந்தியாவின் முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோரின் வீடுகள் மற்றும் அவர்கள் தொடர்புடைய இடங்களில் இந்திய மத்திய புலனாய்வுத் துறை சோதனை மேற்கொண்டுவருவதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

டெல்லி, சென்னை உள்பட சிதம்பரத்திற்குச் சொந்தமான 8 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகின்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த மாதம் ஃபெமா சட்டத்தின் கீழ் கார்த்தி சிதம்பரத்திற்கும் அவருடன் தொடர்புடையதாகக் கூறப்படும் ஒரு நிறுவனத்திற்கும் அழைப்பாணை அனுப்பப்பட்டதுடன் ஏர்செல் – மக்சிஸ் வழக்கிலும் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வந்தது.

இந்த நிலையில்தான் இந்த சோதனைகள் இன்று செவ்வாய்க்கிழமை காலை முதல் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சோதனைகள் எந்த வழக்கிற்காக, எத்தனை இடங்களில் நடக்கின்றன என்பதை சி.பி.ஐ. தெரிவிக்கவில்லை.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More