பாகிஸ்த்தான் ராணுவம் ஒப்பந்தத்தை மீறி இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்துவது தொடர்ந்து வருகிறது. அதன்படி ரஜுரி மாவட்டத்தில் உள்ள இந்திய எல்லையில், மூன்றாவது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. பாகிஸ்தானின் தொடர் தாக்குதலை அடுத்து எல்லையில் உள்ள 1500-க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 16 மணிநேரத்தில் சர்யா, கம்பா, அன்வாஸ், பந்தர் உள்ளிட்ட 4 குக்கிராமங்களின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக ரஜுரி மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் நவ்ஷோரா, மஞ்சகோட் பகுதிகளில் பாகிஸ்தான் படைகள் நேற்று முதல் நடத்தி வரும் தாக்குதலால் அப்பகுதியை சேர்ந்த மக்கள் 10 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் கடும் பாதிப்புக்குளடளாகியுள்ளதாகவும் தாக்குதலில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் 3 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த பகுதியில் உள்ள 51-க்கும் மேற்பட்ட பாடசாலைகள் காலவரையின்றி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் இத்தகைய செயலுக்கு தக்க பதிலடி கொடுக்குமாறு மத்திய உள்துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் இந்திய ராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.