166
யாழ் பல்கலைக்கழகத்தில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது. புங்குடுத்தீவு மாணவி கொலை வழக்கினை கொழும்புக்கு மாற்றக் கூடாது எனத் தெரிவித்தும் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் காவல்துறையினர் கொல்லப்பட்டமைக்கு நீதி கோரியும் இவை தொடர்பில் அரசாங்கம் 30 நாட்களுக்குள் உரிய பதிலை வழங்க வேண்டும் என தெரிவித்தும் அவர்கள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
பல்கலைக்கழக மாணவர்கள் ,ஆசிரியர் சங்க பிரதிநிதிகள், மற்றும் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் ஆகியோர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Spread the love