வாள்வெட்டுக் கும்பலைச் சேர்ந்த 8 பேரில் மூவருக்கு 3 வருடங்கள் கடூழியச் சிறைத் தண்டனையும் 5 பேருக்கு ஒரு வருட கடூழியச் சிறைத் தண்டனையும் விதித்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்துள்ளது.
2012ஆம் ஆண்டு யாழ்ப்பாணம், மடத்தடியில் இடம்பெற்ற வாள் வெட்டுச் சம்பவத்தையடுத்து 8 பேர் பொலிஸாரால் கைது செய்யப் பட்டனர். அந்த கும்பலுக்கு டில்லு என்று பிற்காலத்தில் பொலிஸார் பெயரும் வைத்தனர். டில்லு உள்ளிட்ட 8 சந்தேகநபர்கள் மீதான வழக்கு விசாரணைகள் யாழ்ப்பாணம் நீதிவான் மன்றில் இடம் பெற்று வந்தன. அந்த நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை குறித்த வழக்கிற்கு தீர்ப்பு வழங்கப்பட்டது.
அதன் போது , வாளால் வெட்டி ஒருவருக்கு 8 காயங்களை ஏற்படுத்திய குற்றத்துக்கு 3 பேருக்கு 3 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனையும், அவர்களுக்கு உடந்தையாகவிருந்த ஏனைய 5 பேருக்கும் ஒரு வருட கடூழிய சிறைத் தண்டனை எனவும் , குற்றவாளிகள் அனைவரும் பாதிக்கப்பட்டவருக்கு தலா 50 ஆயிரம் ரூபா இழப்பீடு வழங்க வேண்டும்’ எனவும், யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சி.சதீஸ்தரன் உத்தரவிட்டார்.
குறித்த வழக்கில் குற்றவாளிகள் சார்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் , நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் முன்னிலையாகி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
1 comment
சாதரண வக்கீல் ஒருவர் இந்த வழக்கில் ஆஜராகியிருந்தால் அது அவரது தொழில் என்று ஏற்றுக் கொள்ளலாம் , ஆனால் தமிழர்களின் கலாச்சாரத்தை சீரழிக்கும் வாள் வெட்டு கலாச்சாரம், கஞ்சா கலாச்சாரம், களவு கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் சிங்கள கொலையரசின் கைக்கூலிகளுக்காக ஆஜராகிய சட்ட வல்லுறவாளன் தானும் ஒரு சிங்களத்தின் கைக்கூலிதான் என்பதை நிருபித்துள்ளார். ராஜன்.