Home இலங்கைடில்லு வாள்­வெட்­டுக் கும்­ப­லைச் சேர்ந்த மூவருக்கு 3 வருடங்களும் 5 பேருக்கு ஒரு வருடமும் கடூ­ழி­யச் சிறை

டில்லு வாள்­வெட்­டுக் கும்­ப­லைச் சேர்ந்த மூவருக்கு 3 வருடங்களும் 5 பேருக்கு ஒரு வருடமும் கடூ­ழி­யச் சிறை

by admin

வாள்­வெட்­டுக் கும்­ப­லைச் சேர்ந்த 8 பேரில் மூவ­ருக்கு 3 வரு­டங்­கள் கடூ­ழி­யச் சிறைத் தண்­ட­னை­யும் 5 பேருக்கு ஒரு வருட கடூ­ழி­யச் சிறைத் தண்­ட­னை­யும் விதித்து யாழ்ப்­பா­ணம் நீதி­வான் நீதிமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்துள்ளது.

2012ஆம் ஆண்டு யாழ்ப்­பா­ணம், மடத்­த­டி­யில் இடம்­பெற்ற வாள்­ வெட்­டுச் சம்­ப­வத்­தை­ய­டுத்து 8 பேர் பொலி­ஸா­ரால் கைது செய்­யப்­ பட்­ட­னர். அந்த கும்­ப­லுக்கு டில்லு என்று பிற்­கா­லத்­தில் பொலி­ஸார் பெய­ரும் வைத்­த­னர். டில்லு உள்­ளிட்ட 8 சந்­தே­க­ந­பர்­கள் மீதான வழக்கு விசா­ர­ணை­கள் யாழ்ப்­பா­ணம் நீதி­வான் மன்­றில் இடம்­ பெற்று வந்தன. அந்த நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை குறித்த வழக்கிற்கு தீர்ப்பு வழங்கப்பட்டது.

அதன் போது , வாளால் வெட்டி ஒரு­வ­ருக்கு 8 காயங்­களை ஏற்­ப­டுத்­திய குற்­றத்­துக்கு 3 பேருக்கு 3 ஆண்­டு­கள் கடூ­ழிய சிறைத் தண்­டனையும்,  அவர்­க­ளுக்கு உடந்­தை­யா­க­வி­ருந்த ஏனைய 5 பேருக்­கும் ஒரு வருட கடூ­ழிய சிறைத் தண்­டனை  எனவும் , குற்­ற­வா­ளி­கள் அனை­வ­ரும் பாதிக்­கப்­பட்­ட­வ­ருக்கு தலா 50 ஆயி­ரம் ரூபா இழப்­பீடு வழங்க வேண்­டும்’ எனவும், யாழ்ப்­பா­ணம் நீதி­மன்ற நீதி­வான் சி.சதீஸ்­த­ரன் உத்­த­ர­விட்­டார்.

குறித்த வழக்கில் குற்றவாளிகள் சார்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் , நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் முன்னிலையாகி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

1 comment

ராஜன். May 17, 2017 - 3:43 pm

சாதரண வக்கீல் ஒருவர் இந்த வழக்கில் ஆஜராகியிருந்தால் அது அவரது தொழில் என்று ஏற்றுக் கொள்ளலாம் , ஆனால் தமிழர்களின் கலாச்சாரத்தை சீரழிக்கும் வாள் வெட்டு கலாச்சாரம், கஞ்சா கலாச்சாரம், களவு கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் சிங்கள கொலையரசின் கைக்கூலிகளுக்காக ஆஜராகிய சட்ட வல்லுறவாளன் தானும் ஒரு சிங்களத்தின் கைக்கூலிதான் என்பதை நிருபித்துள்ளார். ராஜன்.

Comments are closed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More