இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன் தனது தாயாரை சந்திக்க கோரிய அனுமதி நிராகரிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் முருகனின் அறையில் இருந்து 2 கைத்தொலைபேசிகள் ,சிம்கார்டு உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், முருகனை பார்வையாளர்கள் சந்திக்க தடை விதிக்கப்பட்டது.
மே 29ம் திகதி முருகனின் தாயார் இலங்கை செல்ல வேண்டியுள்ளதால் அதற்குள் அவரை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் முருகன் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. குறித்தவழக்கு இன்றையதினம் விசாரணைக்கு வந்தநிலையில் பார்வையாளர்களை சந்திக்க அனுமதி மறுப்பது மனிதாபிமானமற்ற செயல் என்றும் தாயாரை முருகன் சந்திக்க அனுமதி அளிக்க வேண்டும் என்றும் முருகன் தரப்பு சட்டத்தரணி வலியுறுத்தினார்.
இரு தரப்பு வாதத்தையும் கேட்ட சென்னை உயர்நீதிமன்ற கோடைகால நீதிமன்றம் வழக்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளது. இதனால் பார்வையாளர்கள் முருகனை சந்திப்பதற்கு விதிக்கப்பட்ட தடை நீடிக்கிறது.