பாகிஸ்தான் அணியின் வீரர்களான உமர் அக்மல் மற்றும் ஜூனைட் கான் ஆகியோருக்கு எதிராக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் உள்ளுர் போட்டித் தொடரில் ஒழுக்கயீனமாக நடந்து கொண்டதாக இருவர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற இந்த சம்பவத்துக்காக இருவரும் போட்டிக் கொடுப்பனவில் 50 வீதத்தினை செலுத்த வேண்டுமென பாகிஸ்தான் கிரிக்கட் வாரியம் அறிவித்துள்ளது. ஜூனைட் கான் போட்டியில் பங்கேற்பது தொடர்பில் அணித் தலைவரான உமர் அக்மால் வெளியிட்ட கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை நடத்திய பாகிஸ்தான் கிரிக்கட் வாரியம் அபராதம் விதித்துள்ளது.