அரசாங்கத்திற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ சவால் விடுத்துள்ளார். அரசாங்கத்திற்கு வெற்றி பெறுவோம் என்ற தைரியம் இருந்தால் மூன்று மாகாணசபைத் தேர்தல்களையும் நடத்துமாறு ரத்தினபுரியில் வைத்து அவர் சவால் விடுத்துள்ளார்.
தேர்தல்களில் வெற்றியீட்ட முடியும் என அரசாங்கம் பிரச்சாரம் செய்து வருவதாகவும் அவ்வாறு என்றால் ஏன் அரசாங்கத்தினால் தேர்தல்களை நடத்த முடியவில்லை எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். தேர்தல் நடத்தினால் யாருக்கு மக்கள் ஆதரவு காணப்படுகின்றது என்பதனை தெளிவாக அறிந்து கொள்ள முடியும் என குறிப்பிட்டுள்ள மகிந்த பல்வேறு காரணங்களை காண்பித்து அரசாங்கம் மாகாணசபைத் தேர்தல்களை ஒத்தி வைக்கக் கூடாது என தெரிவித்துள்ளார்.