Home இந்தியாகாவிரி உரிமை மீட்புக்குழுவின் புகையிரத மறியல் போராட்டம் தொடர்கிறது:-

காவிரி உரிமை மீட்புக்குழுவின் புகையிரத மறியல் போராட்டம் தொடர்கிறது:-

by admin

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி காவிரி உரிமை மீட்புக்குழு சார்பில் கடந்த 15ம்திகதி முதல் ஒருவாரம் தொடர் புகையிரத மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்தநிலையில் இன்று 3வது நாளாக தஞ்சை மாரியம்மன் கோவில் புகையிர் பகுதியில் தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் அதிகளவான விவசாயிகளும் கலந்து கொண்டுள்ளனர்.

கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டுவதை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும். ஒற்றை தீர்ப்பாயத்தை ரத்து செய்ய வேண்டும். கடன் தள்ளுபடி உள்ளிட்ட முழுமையான வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக காவிரி டெல்டா பகுதியை அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் 33 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More