சிரியாவின் ஹமா மாகாணத்தில் அரச கட்டுப்பாட்டில் உள்ள இரண்டு கிராமங்களில் ஐ.எஸ் தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் 50 பேர் கொல்லப்பட்டுள்ளதாக பிரித்தானியாவை மையமாக கொண்டு செயல்படும் சிரிய மனித உரிமைகள் கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது. கொல்லப்பட்டவர்களில் 15 பேர் அப்பாவி பொதுமக்கள் எனவும் 27 பேர் அரச படையினர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
அதேவேளை உயிரிழந்தவர்களில் 10 பேரின் உடல்கள் யார் என்பது குறித்து அடையாளம் காணப்பட முடிமாமல் உள்ளது எனவும் சிரிய மனித உரிமைகள் கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தாக்குதல் மேற்கொண்ட ஐ.எஸ். அமைப்பை சேர்ந்த 10 பேரும் உயிரிழந்ததாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.