விளையாட்டு

இந்திய அணியில் மீளவும் தினேஸ் கார்த்திற்கு வாய்ப்பு


இந்திய தேசிய கிரிக்கட் அணியில் மீளவும் தினேஸ் கார்த்திற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் நடைபெறவுள்ள சர்வதேச கிரிக்கட் பேரவையின் சம்பியன்ஸ் கிண்ண ஒருநாள் சர்வதேச போட்டித் தொடருக்கான இந்திய குழாமில் தினேஸ் கர்hத்திக் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

இந்திய வீரர் மானிஸ் பாண்டேவிற்கு ஏற்பட்ட உபாதை காரணமாக தினேஸ் கர்த்திற்கு இந்த சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இந்தியன் பிரிமியர் லீக் போட்டித் தொடரில் கொல்கொட்டா நைட்ரைடர்ஸ் அணியின் சார்பில் விளையாடி வருகின்ற பண்டே  பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது  தசைப் பிடிப்பு உபாதையினால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

2004ம் ஆண்டு முதல் இந்திய அணிக்காக விளையாடி வரும் கார்த்திக் இதுவரையில் 71 ஓருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply