வடகொரியாவிற்கும் ரஸ்யாவிற்கும் இடையில் கப்பல் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் தடையையும் மீறி இவ்வாறு கப்பல் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மாங்ஜங்பொங் ( Mangyongbong )என்ற வடகொரியாவிற்கு சொந்தமான கப்பலே இவ்வாறு பயணத்தை ஆரம்பித்துள்ளது. இந்தக் கப்பல் சரக்குகளையும் பயணிகளையும் ஏற்றிச் செல்லும் என தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்காவிற்கும் வடகொரியாவிற்கும் இடையில் கடுமையான முரண்பாட்டு நிலைமைகள் காணப்படும் நிலையில் ரஸ்ய – வடகெரிய கப்பல் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. விடுதி , பார், கரோக்கே உள்ளிட்ட சகல வசதிகளும் இந்த கப்பலில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. சீன சுற்றுலாப் பயணிகள் இந்தக் கப்பலை அதிகம் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.