தேசிய படைவீரர்கள் தினம் இன்றைய தினம் பாராளுமன்ற மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் இந்த நிகழ்வில் பங்கேற்க உள்ளனர். பாராளுமன்ற மைதானத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள யுத்த நினைவுத்தூபிப் பகுதியில் இந்த நிகழ்வு நடத்தப்பட உள்ளது. முப்படைத் தளபதிகள், காவல்துறை மா அதிபர், யுத்தத்தில் உயிர் நீத்த முப்படை வீரர்களின் குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்க உள்ளனர்.
உயிர்த் தியாகம் செய்த படையினருக்கு மரியாதை வேட்டுக்குள் தீர்த்து கௌரவரமளிக்கப்பட உள்ளது. இந்த நிகழ்வு காரணமாக பிற்பகல் 2.00 மணியின் பின்னர் பாராளுமன்ற வீதியின் போக்குவரத்து நடவடிக்கைகள் விசேட ஒழுங்குகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது