ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சுப் பதவிகளில் மாற்றம் செய்ய வேண்டாம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில், ஜனாதிபதி மைத்திரி மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோரிடம் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
இதன்படி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சுப் பதவிகளில் மட்டுமே மாற்றம் செய்யப்படும் என தெரிவிக்கப்படுகிறது. அபிவிருத்தியை கொண்டு வர போதியளவு கால அவகாசம் தமது கட்சி அமைச்சர்களுக்கு வழங்கப்பட வேண்டுமென கோரியுள்ள பிரதமர் இன்னும் ஆறு மாத காலத்தின் பின்னர் தேவை ஏற்பட்டால் அமைச்சரவையில் மாற்றம் செய்வது குறித்து கவனம் செலுத்த முடியும் என தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை மாற்றம் செய்யப்படும் போது பிரதமரின் ஆலோசனையை கேட்க வேண்டியது 19ம் திருத்தச் சட்டத்தின் ஊடாக கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.