இந்தியாவின் உத்தரபிரதேசத்தில் இடி, மின்னலுடன் பெய்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. இந்த மழையில் கட்டிடங்கள் இடிந்தது உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களில் 32 பேர் உயிரிழந்துள்ளனர்;.
பலத்த மழை பெய்ததுடன் இடி, மின்னலுடன் கடும்மழை பெய்ததுடன் சூறாவளிக்காற்றும் வீசியதானால் மரங்கள், மின்கம்பங்கள் முறிந்தும் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவங்களில் சிக்கி; பரேக் மாவட்டத்தில் மட்டும் 8 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த மாவட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்துள்ளதாகவும் இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டள்ளது.
மேலும் குறித்த மாநிலத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.