இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் 21 மாவோயிஸ்ட்டுக்கள் நேற்றையதினம் காவல்துறையினரிடம் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களில், தீவிரவாதக் குழுவின் தலைவராகச் செயல் பட்ட லக்ஷ்மணன் மத்காமியும் உள்ளடங்குவதாகவும் இவரது தலைக்கு 2 லட்சம் ரூபா சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சரணடைந்த அனைவருக்கும் தலா பத்தாயிரம் ரூபா பணம் வழங்கப்பட்டுள்ளதுடன் மாநில அரசின் சார்பில் அவர்களது மறுவாழ்வுக்கான திட்டங்கள் செயல்படுத்தப்படும் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சுக்மா, பிஜாப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில தினங்களுக் நடவடிக்கையின் போது 15 மாவோயிஸ்ட்டுக்கள் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில்,; 21 மாவோயிஸ்ட்டுக்கள் சரணடைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.