193
இன ரீதியாக தாம் தூற்றப்பட்டதாக இலங்கையர் ஒருவர் பிரித்தானிய காவல்துறையினரிடம் முறைப்பாடு செய்துள்ளார். Welwyn Garden City வீதிகளில் இவ்வாறு துஸ்பிரயோகம் செய்யப்பட்டதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
நாற்பது வயதான எரண்டா விக்கிரமசிங்க என்பவரே இவ்வாறு முறைப்பாடு செய்துள்ளார். வெள்ளையர் ஒருவர் இன ரீதியாக தம்மை தூற்றியதாகக் குற்றம் சுமத்தியுள்ள அவர் இன ரீதியாக தூற்றுதலுக்கு உள்ளானமை பெரும் வேதனையும் கவலையையும் அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். எரண்டா 1990ம் ஆண்டு முதல் அவர் பிரித்தானியாவில் வாழ்ந்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love