Home இலங்கைகளவாடப்பட்ட அமெரிக்க இராணுவ வாகனங்கள் இலங்கைக்கு விற்பனை செய்ய முயற்சிக்கப்பட்டுள்ளது

களவாடப்பட்ட அமெரிக்க இராணுவ வாகனங்கள் இலங்கைக்கு விற்பனை செய்ய முயற்சிக்கப்பட்டுள்ளது

by admin


களவாடப்பட்ட அமெரிக்க இராணுவ வாகனங்கள் இலங்கைக்கு விற்பனை செய்ய முயற்சிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கப் படைவீரர் ஒருவரும் ஆறு தென்கொரியப் பிரஜைகளும் கூட்டாக இணைந்து இவ்வாறு இராணுவ வாகனங்களை விற்பனை செய்ய முயற்சித்துள்ளனர். தென்கொ ரியாவில்  நிலைகொண்டுள்ள அமெரிக்கப் படையினரின் பயன்பாட்டுக்கான ஹம்வீஸ் ( Humvees) ரக இராணுவ வாகனங்களே இவ்வாறு விற்பனை செய்ய முயற்சிகப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஜூன் மற்றும் செப்டம்பர் மாதங்களில் குறித்த  ரக வாகனங்கள் இராணுவ முகாமிலிருந்து களவாடப்பட்டுள்ளன. இந்த வாகனங்களில் சிலவற்றை இலங்கைக்கு விற்பனை செய்ய முயற்சிக்கப்பட்டுள்ளமை விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More