இந்தியன் பிரிமியர் லீக் போட்டித் தொடரின் இறுதிப் போட்டிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி தகுதி பெற்றுக்கொண்டுள்ளது. நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய மும்பை இந்தியன்ஸ் அணி, கொல்கொட்டா நைட் ரைடர்ஸ் அணியை முதலில் துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது. இதன்படி களமிறங்கிய கொல்கொட்ட நைட் ரைடர்ஸ் அணி 18.5 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 107 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக்கொண்டது. இதில் சூரியகுமார் யாதேவ் 31 ஓட்டங்களையும், இசாங்க் ஜாக்கி 28 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பந்து வீச்சில் கரன் சர்மா 4 விக்கட்டுகளை வீழ்த்தினார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 14.3 ஓவர்களில் நான்கு விக்கட்டுகளை மட்டும் இழந்து 111 ஓட்டங்களைப் பெற்று வெற்றியை பதிவு செய்து கொண்டது. இதில் கெரோன் பொல்லார்ட் 45 ஓட்டங்களையும், ரோஹித் சர்மா 26 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். அபார பந்து வீச்சுத் திறமையை வெளிப்படுத்திய கரன் சர்மா போட்டியின் ஆட்ட நாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.