முல்லிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை மே 17 இயக்கம் சென்னை மெரீனா கடற்கரையில் நடத்துவதற்கு காவல்துறை தடை விதித்துள்ளது. மே 17 இயக்கம், இன்று ஞாயிற்றுக் கிழமை மாலையில் மெரீனா கடற்கரையில் கண்ணகி சிலைக்கு அருகில் தமிழீழப் படுகொலைக்கான நினைவேந்தல் என்ற பெயரில் நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது.
இந்த நிலையில் நேற்றையதினம் காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், 2003ஆம் ஆண்டு முதல் சென்னை மெரீனா கடற்கரையில் போராட்டம் நடத்த அனுமதிக்கப்படுவதில்லை என்பதைக் சுட்டிக்காட்டியுள்ளதுடன் மெரீனாவில் சட்ட விதிமுறைகளை மீறி கூட்டங்கள் நடத்துவதோ, குழுமுவதோ சட்டவிரோதமென்றும் அதனை மீறிச் செயல்படுபவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் எச்சரித்துள்ளது.
Spread the love
Add Comment