157
அண்மையில் வெள்ளவத்தை இடிந்து வீழ்ந்த கட்டடத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். எக்ஸலன்ஸீ என்ற கட்டடத்தின் உரிமையாளரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் இரண்டு பேர் உயிரிழந்ததுடன் 21 பேர் காயமடைந்திருந்தனர்.
கைது செய்யப்பட்ட 62 வயதான கட்டட உரிமையாளர் வெள்ளவத்தையைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த நபர் காவல்நிலையில் சரணடைந்துள்ளநிலையில் அவரை காவல்துறையினர் கைது செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Spread the love