அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ராம்ப் இஸ்ரேலுக்கு சென்றுள்ளார். கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் டொனால்ட் ட்ராம்ப் இஸ்ரேல், பலஸ்தீனம் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றுள்ளார்.
பலஸ்தீன மற்றும் இஸ்ரேல் தலைவர்களுடன் ட்ராம்ப் பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் இஸ்ரேல் பலஸ்தீனத்திற்கு இடையில் சமாதான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட வேண்டுமென அவர் கோரியுள்ளார்.
பலஸ்தீனத்திற்கும் இஸ்ரேலுக்கும் இடையில் சமாதானத்தை ஏற்படுத்த முடியும் எனவும் அதற்கான சாத்தியங்கள் உண்டு எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ள டொனால்ட் ட்ராம்ப் இரண்டு தரப்பினரும் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என குறிப்பிட்டுள்ளார்.