இந்தியாவின் முன்னாள் பிரதமர் அமரர் இந்திரா காந்தியும், தமிழகத்தின் முன்னாள் முதல்வர் அமரர் எம்.ஜீ.ராமசந்திரனும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவளித்தனர் என தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளார். ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு உதவுமாறு இந்திய உளவுப் பிரிவான றோவிற்கு இந்திரா காந்தி பணித்திருந்தார் எனவும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எம்.ஜீ.ஆர் நிதி உதவிகளை வழங்கியிருந்தார் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ராஜீவ் காந்தியை படுகொலை செய்வதற்கான வெடிபொருட்களை சிங்கப்பூரிலிருந்து இந்தியாவிற்கு குமரன் பத்மநாதன் அனுப்பி வைத்தார் என முன்னாள் சீ.பி.ஐ உயர் அதிகாரியொருவர் குற்றம் சுமத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.