Home இந்தியா2025-ம் ஆண்டுக்குள் இந்தியா, 2305 சதுர கிலோ மீட்டர் பரப்பளவிலான வனப் பகுதிகளை இழக்கும் – எச்சரிக்கை:-

2025-ம் ஆண்டுக்குள் இந்தியா, 2305 சதுர கிலோ மீட்டர் பரப்பளவிலான வனப் பகுதிகளை இழக்கும் – எச்சரிக்கை:-

by admin

எதிர்வரும் 2025-ம் ஆண்டுக்குள் இந்தியா, 2305 சதுர கிலோ மீட்டர் பரப்பளவிலான வனப் பகுதிகளை இழக்கும் என, இஸ்ரோ விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

குறிப்பாக இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள், அந்தமான் நிக்கோபார் தீவுகள் உள்ளிட்ட இடங்களில் இந்த பாதிப்பு அதிகமாக இருக்கும் என கண்டறியப்பட்டுள்ளது.

நிலப் பரப்பு மாற்றத்தை அறிவதற்கான மென்பொருளைப் பயன்படுத்தி இஸ்ரோ விஞ்ஞானிகள் காடுகளின் பரப்பளவு பற்றி ஆய்வு நடத்திய போது இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களான அசாம், மணிப்பூர், அந்தமான் நிக்கோபார் தீவு உள்ளிட்ட இடங்களில் கடந்த 2005 முதல் 2013-ம் ஆண்டு வரை காடுகளை அழிக்கும் நடவடிக்கை 0.3 சதவீதத்துக்கும் அதிகமாக இருந்துள்ளதாகக் கூறப்பட் டுள்ளது. அத்துடன் கடந்த 133 ஆண்டுகளில் 40 சதவீதம் பரப்பளவு காடுகள் அழிக்கப் பட்டுள்ளன எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறிப்பாக வடகிழக்கு மாநிலங் களில் பெரும்பாலான வனப் பகுதிகள் தனியாரிடம் இருப்பதும், வனப்பகுதிகள் அழிக்கப்பட்டு, சாகுபடி பரப்பளவாக மாற்றப்பட்டு வருவதும் காடுகளின் அழிப்புக்கு முக்கியக் காரணங்களாக முன் வைக்கப்படுகின்றன.

எனவே காடுகளை அழிவில் இருந்து மீட்கும் நடவடிக்கையில் இறங்க இந்த ஆய்வு உதவிகரமாக இருக்கும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More