பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவான கையெழுத்து இயக்கத்தை சோனியா காந்தி டெல்லியில் நேற்று தொடங்கி வைத்தார். பாராளுமன்றம், சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
சில அரசியல் கட்சியினர் இதற்கு எதிர்ப்பும் தெரிவிக்கின்றத னால் பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா பாராளுமன்றத்தில் தொடர்ந்து நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில் ராஜீவ் காந்தி நினைவு நாள் டெல்லியில் நேற்று அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத்தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் பங்கேற்ற போது பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தி அகில இந்திய மகளிர் காங்கிரஸ் சார்பில் கையெழுத்து இயக்கம் ஏற்படுத்தப்பட்டது.
முதல் கையெழுத்தை சோனியா காந்தி பதிவு செய்து இந்த இயக்கத்தை தொடங்கிவைத்தார். இதனை ஒருங்கிணைத்து எதிர்வரும் ஓகஸ்டு 20ம்திகதி ராஜீவ் காந்தி பிறந்த நாளின் போது, ஜனாதிபதியிடம் அளிக்க முடிவு செய்து உள்ளனர்.