யாழ் புங்குடுதீவு மாணவி படுகொலை தொடர்பான வழக்கினை யாழ்ப்பாணத்திலேயே நடாத்துமாறு சட்டமா அதிபர் பிரதம நீதியரசரை கோரியுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்கள தகவல்கள் மூலம் அறிய முடிகிறது.
குறித்த வழக்கின் குற்றப்பத்திரமும் அதனுடான ஆவணங்களும் கடந்த வாரம் சட்டமா அதிபரால் யாழ்.மேல் நீதிமன்றுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.அவை தற்போது யாழ்.மேல் நீதிமன்ற பதிவாளரால் இரும்பு பெட்கத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் குறித்த வழக்கு கொழும்பில் மூன்று மேல் நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில், ராயலேட் பார் தீர்ப்பாயம் மூலம் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
இந்த நிலையில் யாழ்ப்பாண மேல் நீதிமன்றிலேயே குறித்த வழக்கினை நடாத்துமாறு சட்டமா அதிபர் பிரதம நீதியரசரை கோரியுள்ளதாக அறிய முடிகிறது. அத்துடன் யாழ்ப்பாண மேல் நீதிமன்றில் நடாத்துவதற்காக மூன்று தமிழ் நீதிபதிகளையும் நியமிக்குமாறும் சட்டமா அதிபர் பிரதம நீதியரசரை கோரியுள்ளதாகவும் அறிய முடிகிறது.
குறித்த வழக்கு யாழ்ப்பாணத்திலையா அல்லது கொழும்பிலையா நடாத்துவது என்பது தொடர்பான இறுதி முடிவு இவ் வாரத்திற்குள் வெளிவரும் எனவும் சட்டமா அதிபர் திணைக்கள தகவல்கள் மூலம் அறிய முடிகிறது.