167
அரசியல் தேவைகளுக்காக பொதுமக்களை கொலை செய்வது மிகக் கொடிய செயலாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பிரித்தானியாவின் மான்செஸ்டரில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் தொடர்பில் கருத்து வெளியிட்ட போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இந்த தீவிரவாத தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
குறைந்தபட்சம் 22 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 59 பேர் வரையில் காயமடைந்துள்ளனர். மான்செஸ்டரில் நடைபெற்ற பொப்பிசை நிகழ்ச்சி ஒன்றில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது
Spread the love