173
கத்தி குத்துக்கு இலக்கான டென்னிஸ் வீராங்கனை பெற்றா கிவிரோவா (Petra Kvitova ) விம்பிள்டன் போட்டியில் பங்கேற்க உள்ளார். செக் குடியரசுகளைச் சேர்ந்த பெற்றா இரண்டு தடவைகள் 2011 மற்றும் 2014ம் ஆண்டுகளில் விம்பிள்டன் சாம்பியன் பட்டம் வென்றிருந்த இவர் சுமார் ஏழு மாதங்களுக்கு முன்னதாக தனது வீட்டில் வைத்து கத்தி குத்துக்கு இலக்காகியிருந்தார்.
எதிர்வரும் வாரத்தில் நடைபெறவுள்ள பிரெஞ்சு ஓபன் போட்டித் தொடரிலும் பெற்றா பங்கேற்கக்கூடிய வாய்ப்பு உண்டு எனத் தெரிவிக்கப்படுகிறது. விம்பிள்டன் போட்டித் தொடர் எதிர்வரும் ஜூலை மாதம் 3ம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Spread the love