ஒரு வாரத்துக்குள் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் உலகமே சிரிக்கும் வகையில் சென்னையில் போராட்டம் நடத்த போவதாக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் அய்யாக்கண்ணு தலைமையில் 16 விவசாயிகள் இந்திய வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு, செயலாளர் ககன்தீப் சிங் பேடி ஆகியோரை சந்தித்து பேசியதன் பின்னர் செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அமைச்சரும், அதிகாரியும் ஒரு வாரத்தில்தஎங்கள் கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்குவதாக உறுதியளித்துள்ளதாகவும் உறுதி அளித்தபடி கிடைக்காவிட்டால் சென்னை சேப்பாக்கத்தில் உலகமே பார்த்து சிரிக்கும் அளவுக்கு மிகப் பெரிய போராட்டம் நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல், விவசாயக் கடன் ரத்து உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் தமிழக விவசாயிகள் கடந்த மார்ச் 14ம் திகத முதல் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.