ஆதாரமற்று தடுத்து வைக்கப்பட்டவருக்கு நட்டஈடு வழங்குமாறு உத்திரபிரதேச அரசாங்கத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2000 ஆண்டு இந்தியாவின் பிஹார் மாநிலத்தில் புகையிரதத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 9பேர் உயிரிழந்திருந்தனர்.
இது தொடர்பாக 2001 ஆம் ஆண்டு அலிகர், முஸ்லிம் பல்கலைக்கழக முன்னாள் ஆய்வு மாணவரான குலாம் அகமது வானி, மொபின் ஆகிய இருவரையும் கைது செய்த டெல்லி காவல்துறையினர் குற்றச்செயலில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டதாக தெரிவித்து அவர்களை லக்னோ சிறையில் தடுத்துவைத்தனர்.
இந்நிலையில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாமையினால் இருவரையும் நீதிமனற்ம் விடுவித்துள்ளதுடன்; வழக்கை விசாரிப்பதில் அதிகாரிகளின் அலட்சியத்துக்கு குலாம் அகமது வானி பலிகடா ஆகியுள்ளார் என தெரிவித்துள்ள நீதிமன்றம் அவர் சிறையில் கழித்த காலத்துக்கு அவரது கல்வித் தகுதிக்கு ஏற்ப சராசரி வருமானம் கணக்கிட்டு உத்திரபிரதேச அரசு வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.