சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகள் குறித்து இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவிற்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. தற்போது அவுஸ்திரேலியாவிற்கு சென்றுள்ள இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அந்நாட்டு பிரதமர் மெல்கம் டர்ன்புல்லை சந்தித்துள்ள நிலையிலேயே இந்த பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையில் ராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டு 70 ஆண்டுகள் பூர்த்தியாகும் நிலையில், ஜனாதிபதி இந்த பயணத்தினை மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கையர்கள், ஈரானியர்கள் மற்றும் ஆப்கானிஸ்தானியர்களே அதிகளவில் அவுஸ்திரேலியாவில் புகலிடக் கோரிகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கல்வி, பாதுகாப்பு, விஞ்ஞானம் தொழில்நுட்பம், பொருளாதார அபிவிருத்தி, மருத்துவ ஆய்வு மற்றும் சட்டவிரோத ஆட்கடத்தல்களுக்கு எதிரான போராட்டம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதியின் பயணத்தின்; போது கவனம் செலுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.