Home இந்தியாஇந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லையில் போர் பதட்டம் நீடித்துவருகின்றது:-

இந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லையில் போர் பதட்டம் நீடித்துவருகின்றது:-

by admin

இந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லையில் இரு நாட்டு ராணுவ வீரர்களும் குவிக்கப்பட்டுள்ளதால் அங்கு போர் பதற்றம் நீடித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்திய எல்லையில் பாகிஸ்தான் தனது போர் விமானங்களை பறக்கவிட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில், இந்திய எல்லை பிராந்தியத்தில்; பாக்கிஸ்தான் விமானம் எந்த வான்வெளி மீறலிலும் ஈடுபடவில்லை என ஒரு இந்திய விமானப்படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும் பாகிஸ்தானின் அறிக்கையைப் பற்றி கவலைப்படக்கூடாது எனவும் நாங்கள் சமாதானத்தை விரும்பும் மக்கள் என்ற போதிலும் அச்சுறுத்தல் வந்தால் அதை எதிர்கொள்ள தயாராக உள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த செவ்வாயக்கிழமை இந்திய ராணுவம் பாக்கிஸ்தான் ராணுவ ஊடுருவலை முறியடித்த வீடியோவை வெளியிட்டது. இதனையடுத்து பாகிஸ்தான் ராணுவமும் இந்திய ராணுவ நிலைகள் மீது தாங்கள் தாக்குதல் நடத்தியதாக ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More