அசாதாரண காலநிலை காரணமாக இலங்கையில் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் மீட்பு நடவடிக்கைக்காக முப்படையினரும் களத்தில் இறங்கியுள்ளனர்.
காலி மற்றும் மாத்தறை பிரதேசங்களில் நிவாரண நடவடிக்கைகளுக்காக நூற்றும் அதிகமான இராணுவத்தினர் அனுப்பப்பட்டுள்ளதாக இலங்கை இராணும் கூறியுள்ளது.
இது தவிர காலிஇ மாத்தறை மற்றும் அம்பாந்தோட்டை போன்ற மாவட்டங்களில் நிவாரண பணிகளுக்காக கடற்படையினரும் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.
நெலுவ, மொரவக்கஇ கம்புறுபிட்டிய போன்ற பிரதேசங்களில் 04 படகுகள் அனுப்பப்பட்டுள்ளதுடன்இ மாத்தறை மாவட்டத்திற்கு 01 படகும்இ களுத்துறைஇ கலவானை பிரதேசங்களுக்கு 02 படகுகளும் அனுப்பப்பட்டுள்ளதாக கடற்படை கூறியுள்ளது.
காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் நடவடிக்கையில் விமானப் படையினரின் இரண்டு உலங்கு வானூர்திகள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளன.
பெல் 212 மற்றும் எம்.ஐ. 17 வகை ஹெலிகப்டர்கள் மீட்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக விமானப்படை கூறியுள்ளது.