ஜப்பானில் தடுத்து வைக்கப்பட்டுள்ள வெளிநாட்டுப் பிரஜைகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குடிவரவு குடியகழ்வுத் திணைக்களத்தின் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள வெளிநாட்டுப் பிரஜைகளே இவ்வாறு போராட்டம் நடத்தி வருகின்றனர். இரண்டு வாரங்களாக இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அவர்கள்முகாம்களின் நிலைமை மிகவும் மோசமாக காணப்படுகின்றது என குற்றம் சுமத்தியுள்ளனர்.
எனினும், அரசாங்கத்தின் கொள்கைகளில் மாற்றம் செய்யப்படாது என ஜப்பானிய உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டோக்கியோவில் அமைந்துள்ள பிராந்திய குடிவரவு குடியகழ்வுத் திணைக்கள தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 20 வெளிநாட்டுப் பிரஜைகளும், ஏனைய சில சிறைகளிலும் இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.