சீரற்ற காலநிலையினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100 ஆக உயர்வடைந்துள்ளது. மேலும் 99 பேரை காணவில்லை என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தகவல் வெளியிட்டுள்ளது. மழை வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக சுமார் 200,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கடுமையான மழை காரணமாக களனி, கிங், களு மற்றும் அத்தனகலுஓய ஆறுகள் பெருக்கெடுத்துள்ளதனால் இந்த ஆறுகளை அண்டிய பகுதியில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
காணாமல் போனவர்களை தேடும் பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இன்றைய தினம் சற்று மழை குறைந்தாலும், சீரற்ற காலநிலை நிலைமைகள் தொடர்ந்தும் நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.