பேச்சுவார்த்தைகளுக்கு திரும்புமாறு பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி றொட்றிகோ டூரெற்ரே தீவிரவாத அமைப்பிற்கு அழைப்பு விடுத்துள்ளார். ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பு பேணி வரும் பிலிப்பைன்ஸ் தீவிரவாத இயக்கமொன்றுக்கே ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார். தாக்குதல்கள் வன்முறைகளை கைவிட்டு பேச்சுவார்த்தை நடத்துமாறு கோரியுள்ள அவர் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு இன்னமும் வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
Mindanao வில் இஸ்லாமிய தீவிரவாத செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. ஜனாதிபதியின் சமாதான முனைப்பு குறித்த அழைப்பிற்கு தீவிரவாதிகள் இதுவரையில் சாதகமான பதில் எதனையும் இதுவைரயில் அளிக்கவில்லை.