இயற்கைஅனர்த்தம் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை, 151ஆக அதிகரித்துள்ளது என, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று மாலை அறிவித்துள்ளது.
இந்த அனர்த்தங்களின் காரணமாகக் காயமடைந்தோரின் எண்ணிக்கை 95ஆக அதிகரித்துள்ளதுடன் 111 பேரை, இ காணவில்லை எனவும் தெரிவித்துள்ளது.
அனர்த்தம் காரணமாக 122 பேர் பலி – 97 பேர் காணாமல்போயுள்ளனர்
May 28, 2017 @ 03:17
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக இதுவரையில் 122 பேர் வரையில் உயிரிழந்துள்ளனர். நாடுமுழுவதும் சுமார் 15 மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள இந்த அனர்த்த நிலைமையினால் 97 பேர் காணாமல்போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
15 மாவட்டங்களில் மக்கள் அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், களுத்துறை, இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன எனவும் களுத்துறை மாவட்டத்தில் 42 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 68 பேர் காணாமல் போயுள்ளனர் எனவும் கம்பஹா மாவட்டத்தில் 3 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 5 பேர் காணாமல் போயுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஹம்பாந்தோட்டையில் 5 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் மாத்தறை மாவட்டத்தில் அனர்த்தினால் 11 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 17 பேர் காணாமால் போயுள்ளனர் எனவும் கேகாலை மாவட்டத்தில் இரண்டு பேர் அனர்த்தத்தினால் கொல்லப்பட்டுள்ளதுடன், மூன்று பேர் காணாமல் போயுள்ளனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் சீரற்ற காலநிலை காரணமாக அதிக பாதிப்புக்கு உள்ளான மாவட்டமாக இரத்தினபுரி மாவட்டம் காணப்படுகின்றது. அங்கு அனர்த்தினால் 51 பேர் உயிரிழந்துள்ளதுடன், ஐந்து பேர் காணாமல் போயுள்ளனர். கொழும்பு, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, களுத்துறை, இரத்தினபுரி, கேகாலை, கம்பஹா, கண்டி, நுவரெலியா, மத்தளை, திருகோணமலை, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்கள் சீரற்ற காலநிலையால் பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளன.
அந்த மாவட்டங்களில் வெள்ளம், மண்சரிவு, காற்று காரணமாக ஒரு லட்சத்து ஐந்தாயிரத்து 956 குடும்பங்களைச் சேர்ந்த 4 லட்சத்து 15 ஆயிரத்து 618 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதுபோல் 20 ஆயிரத்து 670 குடும்பங்களைச் சேர்ந்த 86 ஆயிரத்து 316 பேர் 290 தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே, தற்போது மழை குறைவடைந்துள்ள போதிலும் வெள்ள நீரின் அளவு குறைவடையவில்லை என வடிகாலமைப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.