சீரற்ற காலநிலையினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 177 ஆக உயர்வடைந்துள்ளது. மேலும் 109 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிறுவனம் தெரிவித்துள்ளது.
அனர்த்தங்கள் காரணமாக நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதுடன் 1லட்சத்து 51ஆயிரத்து 392 குடும்பங்களைச் சேர்ந்த 5லட்சத்து 57ஆயிரத்து 505 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
2003ம் ஆண்டு பின்னர் இடம்பெற்ற மிக மோசமான வெள்ள அனர்த்தம் இதுவெனத் தெரிவிக்கப்படுகிறது.
இயற்கை சீற்றத்தினால் பலியானோர் எண்ணிக்கை 164 ஆக உயர்வு
May 29, 2017 @ 03:36
இயற்கை சீற்றம் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 164 ஆக உயர்வடைந்துள்ளது. கடந்த சில தினங்களாக நாட்டின் பல பகுதிகளில் பெய்து வரும் கம் மழை காரணமாக இவ்வாறு உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன.
குறிப்பாக மழை வெள்ளம், மண்சரிவு போன்ற காரணிகளினால் அதிகளவான மக்களின் உயிர்கள் காவுகொள்ளப்பட்டுள்ளன. மேலும், 105 பேரைக் காணவில்லை என அனர்த்த முகாமைத்துவ நிறுவனம் தெரிவித்துள்ளது.
மழை வெள்ளம் காரணமாக சுமார் நான்கு லட்சம் பேர் வரையில் பாதிக்கப்பட்டுள்ளனர். சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் எட்டு மாவட்டங்களில் தொடர்ந்தும் மண்சரிவு அபாயம் நிலவி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. முப்படையினர், காவல்துறையினர் உள்ளிட்டவர்கள் காணாமல் போனவர்களை மீட்கும் பணிகளில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.