சிரேஸ்ட அமைச்சர்கள் இரண்டு பேரை பணி நீக்குமாறு ஜனாதிபதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், பாராளுமன்ற உறுப்பினர் சதுர சேனாரட்ண கோரிக்கை விடுத்துள்ளார்.
சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரட்நாயக்க மற்றும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ ஆகியோரை அந்தப் பதவிகளிலிருந்து நீக்குமாறு கோரியுள்ளார். ஊழல் மோசடிகள் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களை தண்டிப்பதாகக் கூறியே அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக்கொண்டதாகவும், இந்த இரண்டு அமைச்சர்களும் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் எனவும் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களை தண்டிக்க நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஊழல் மோசடிகள் மற்றும் குற்றச் செயல்கள் தொடர்பிலான 82 முறைப்பாடுகளில் ஒரு முறைப்பாட்டு விசாரணை கூட இன்னமும் பூர்த்தியாகவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். அண்மையில் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்ட போதும் இந்தப் அமைச்சுப் பதவிகளில் மாற்றம் செய்யப்படவில்லை எனவும், இது குறித்து மக்கள் அதிருப்தியுடன் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.