உலகம்

3 நாட்களுக்கு பின்பிரிட்டிஸ் எயார்வேஸ் நிறுவனத்தின் சேவைகள் ஆரம்பம்

பிரிட்டிஸ் எயார்வேஸ் சேவை நிறுவனத்தின் சேவைகள் 3 நாட்களுக்கு  பின் முழுமையாக ஆரம்பிக்கப்பட்டு உள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.  கடந்த சனிக்கிழமை திடீரென குறித்த நிறுவனத்தின் கணினி கட்டமைப்பு முடங்கியதனால் லண்டன் ஹீத்ரூ, கட்விக் மற்றும் பெல் ஃபாஸ்ட் விமான நிலையங்களில் இருந்து புறப்பட வேண்டிய விமானங்கள் புறப்பட முடியாமல் நிறுத்தப்பட்டன.

இதனால்  பிரித்தானியாவில் மட்டுமல்லாமல் உலகின் பல பாகங்களிலும் விமானசேவைகள் பாதிக்கப்பட்டிருந்தன. இந்தநிலையில் மீண்டும் இன்று பிரிட்டிஷ் ஏயர்வேஸின் ஹீத்ரூ, கட்விக் விமான நிலையங்களில் இருந்து விமான சேவை முழுமையாக மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply