183
இலங்கையில் ஏற்பட்டுள்ள காலநிலை சீர்கேட்டு நிலைமை குறித்து ஐக்கிய நாடுகள் அமைப்பு கவலை வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் அன்டானியோ குட்ராஸ் இவ்வாறு கவலை வெளியிட்டுள்ளார்.
இலங்கை மற்றும் பங்களாதேஸ் ஆகிய நாடுகளில் ஏற்பட்டுள்ள பாரிய அனர்த்த நிலைமை வருத்தமளிக்கும் வகையில் அமைந்துள்ளதாகத் தெரிவித்துள்ள அவர் ஐக்கிய நாடுகள் அமைப்பின் பணியாளர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். 2003ம் ஆண்டின் பின்னர் இலங்கையில் ஏற்பட்ட பாரிய வெள்ள அனர்த்தம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love