உலகம்

வெள்ளை மாளிகையின் தொடர்பாடல் பணிப்பாளர் பதவி விலகினார்


வெள்ளை மாளிகையின் தொடர்பாடல் பணிப்பாளர் மைக் டுப்கே ( Mike Dubke ) தனது பதவி விலகியுள்ளார்.  அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ராம்பினால், வெள்ளை மாளிகையின் தொடர்பாடல் பணி;ப்பாளர் பதவிக்கு  மைக் டுப்கே  நியமிக்கப்பட்டு மூன்று மாதங்கள் மட்டுமேயாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

வெள்ளை மாளிகையின் ஊடகப் பிரிவில்  மாற்றங்களை மேற்கொள்ளும் நோக்கில்  நியமிக்கப்பட்டிருந்த மைக் டுப்கே தனது பதவியை கடந்த 18ம் திகதி ராஜினாமா செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி ட்ராம்பின் நிர்வாகத்தில் சேவையாற்றக் கிடைத்தமை மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் கருதுவதாகவும் தனிப்பட்ட காரணங்களுக்காக பதவியை விட்டு விலகுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் மிக அர்ப்பணிப்புடன் சேவையாற்றும் ஆண்கள் மற்றும் பெண்கள் நிரம்பப் பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply