விமானப்படை முன்னாள் தளபதி எஸ்.பி. தியாகி வெளிநாடு செல்ல நீதிமன்றம் தடை விதித்துள்ளது கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் முக்கிய பிரமுகர்களுக்கென ஹெலிகாப்டர்கள் வாங்கப்பட்டதில் நடந்த முறைகேடு தொடர்பாக விமானப்படை எஸ்.பி. தியாகி, அவரது உறவினர் சஞ்சீவ் தியாகி உள்ளிட்ட மூவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ள நிலையில் இவர்கள் மூவரும் தற்போது ஜாமீனில் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் எஸ்.பி.தியாகி இந்தோனேசியா செல்ல நீதிமன்றம் கடந்த 24ஆம் திகதி அனுமதி வழங்கியமைக்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் சிபிஐ மனு தாக்கல் செய்தது.
இந்த மனு நேற்றையதினம் விசாரணைக்கு வந்த நிலையில் , சிபிஐயின் வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் ஜூலை 12 வரை அவர் வெளிநாடு செல்ல தடை விதித்துள்ளது.