160
இலங்கையில் இயற்கை சீற்றத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பிரார்த்தனை செய்வதாக திபெத்தின் ஆன்மீகத் தலைவர் தலய் லாமா அறிவித்துள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் இதனைத் தெரிவித்துள்ள அவர் மீட்புப் பணிகளுக்காக நிதியை வழங்குமாறு தலய் லாமா நிதியத்திடம் தாம் கோரிக்கை முன்வைப்பதாகத் தெரிவித்துள்ளார்.
சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Spread the love