206
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் 13 ஆவது நினைவு தினம் யாழில் இன்றைய தினம் அனுஸ்டிக்கப்பட்டது. யாழ்.ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் , படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவாக யாழ்.நீதிமன்ற கட்டட தொகுதிக்கு அருகாமையில் அமைக்கப்பட்டு உள்ள நினைவு தூபியில் அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றது.
ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசன் கடந்த 2004ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆம் திகதி மட்டக்களப்பில் உள்ள தனது வீட்டில் இருந்து அலுவலகம் நோக்கி சென்று கொண்டிருக்கையில் , ஆயுத தாரிகளால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டார்.
Spread the love