வெள்ள அனர்த்தத்தை தடுக்கும் முறைமை ஐம்பது ஆண்டுகள் பழமையானது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். காலி மாவட்ட இணைப்புக் கூட்டத்தில் இன்றைய தினம் பங்கேற்ற போது ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
மக்கள் பிரதிநிதிகள் விருப்பு வாக்கை இலக்கு வைத்து தீர்மானங்களை எடுப்பதாகவும், அரசாங்கத்தினால் எடுக்கும் அபிவிருத்தி திட்டங்கள் தடுக்கப்படுவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
திட்டமொன்றை மாற்றியமைக்க முயற்சிக்கும் போது எதிர்ப்பை வெளியிடும் தரப்பினர், அனர்த்தங்களின் போதும் எதிர்ப்பை வெளியிட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்படக்கூடிய அனர்த்தங்களை புரிந்து கொண்டு அதற்கு காத்திரமான தீர்வுத் திட்டங்கள் முன்வைக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். அரசியல் பேதங்களை களைந்து அனைவரும் வெள்ள அனர்த்தங்களை தடுக்க புதிய திட்டமொன்றை முன்னெடுக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.